பொலிவான முகத்தை பெற உதவும் தேன்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பெண்களுக்கு முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
இருந்தாலும் அனைத்து பெண்களும் எப்போதும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில்,பொலிவான முகத்தை பெற தேனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- தேன் - 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரம் 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.
2. தேவையான பொருட்கள்
- தயிர்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை வாரம் 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் நன்கு பொலிவுடன் மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |