வீட்டிலிருந்தப்படி ஆளை மயக்கும் கருப்பு நிற கண் மை! இந்த பொருள் மட்டும் சேர்த்து செய்ங்க..
Skin Care
By Kirthiga
பெரும்பாலும் பெண்கள் என்றாலே தங்களை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
அதிலும் தனது கண்களை வசீகரமாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை செய்வார்கள்.
ஆகவே கண்களுக்கு பூசக்கூடிய மை எவ்வாறு வீட்டிலேயே செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
பெரிய அளவு மண் அகல் - 1
-
சந்தனத்தூள் - 2 தே.கரண்டி
-
வெள்ளை நிற பருத்தி துணி - 1 சிறிய துண்டு
-
பசுநெய் - 3 தே.கரண்டி
-
பாதாம் பருப்பு - 1
-
அகலமான கண்ணாடி குப்பி - 1
செய்முறை
-
சந்தனத்தூளை தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
-
அத்துடன் துணியை கட்டி நன்றாக நனைத்து நிழலில் உலர விட வேண்டும்.
அது உலரியவுடன், திரி போல சுருட்டிக் கொண்டு விளக்கில் நெய் ஊற்றி தீபத்தை ஏற்ற வேண்டும்.
-
எவர்சில்வர் அல்லது மண் தட்டு ஒன்றை அவற்றின் மீது கவிழ்த்து வைக்க வேண்டும்.
-
பாதாமை பிடித்துக் கொண்டு விளக்கில் காட்டி ஆற வைக்க வேண்டும்.
-
பின் அதை இடித்துக் கொள்ள வேண்டும்.
பற்றிவைக்கப்பட்ட விளக்கு அணைந்தவுடன், விளக்கின் மேல் போட்ட தட்டில் உள்ள கரியை சுரண்டி எடுக்க வேண்டும்.
-
அதை கண்ணாடி குப்பியில் சேர்க்க வேண்டும்.
-
மேலும் அதனுடன் பாதாம் கரியையும் கலந்துக் கொள்ள வேண்டும்.
- இறுதியாக அந்த கலவையில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி நீர்த்தன்மையாக செய்து கண்ணிற்கு பயன்படுத்தி வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US