முகப்பொலிவை அதிகரிக்க இந்த ஒரு மாவு போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க மைதா மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மைதா- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து அத்துடன் மைதாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக் சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, சரும நிறத்தை அதிகரிக்கும்.
2. தேவையான பொருட்கள்
- மைதா- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- மஞ்சள்- ½ ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, மைதா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் நன்கு பொலிவாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |