தங்கம் போல் முகம் ஜொலிக்க உதவும் மாம்பழ பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், தங்கம் போல் முகம் ஜொலிக்க மாம்பழ பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மாம்பழம்- 1 துண்டு
- மஞ்சள்- 1 சிட்டிகை
- பாதாம் எண்ணெய்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மாம்பழ கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூளை சேர்த்து, அத்துடன் பாதாம் எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்த உதவும்.
2. தேவையான பொருட்கள்
- மாம்பழம்- 1 துண்டு
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மாம்பழ கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |