நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை டை.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் டையை இயற்கை முறையில் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் ஓடு- 1
- வசம்பு - 1
- விளக்கெண்ணெய் - 3 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் தேங்காய் ஓட்டை மற்றும் வசம்பை தீயில் சுட்டு கரியாக்கிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் இதனை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் செய்துவைத்த அந்த பொடியை கலந்து இந்த கலவையை நரைமுடியில் நன்கு தடவவும்.
இறுதியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலையை மென்மையான ஷாம்பு பயன்படுத்தி அலசிக்கொள்ளலாம்.
இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் நரைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |