சரும நிறத்தை அதிகரிக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக பெண்களுக்கு முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
இருந்தாலும் அனைத்து பெண்களும் எப்போதும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில், சரும நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பேஸ்பேக்கை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம்- ½ கப்
- காபித் தூள்- 1 ஸ்பூன்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- தயிர் - 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் சாதம் மற்றும் காபித் தூள் சேர்த்து கலக்கவும் வேண்டும்.
பின் அதில் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்தது இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ரோஸ்வாட்டர் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் நன்கு வெள்ளையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |