முகத்தை பொலிவாக்க உதவும் இயற்கை மாவு.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?
பெண்கள் எப்போதும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், ஒரே மாதத்தில் முகப்பொலிவை அதிகரிக்க உதவும் மூலிகை மாவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கஸ்தூரி மஞ்சள் - 300g
- பூலாங்கிழங்கு- 150g
- ரோஜா பூ - 100g
- பச்சரிசி- 150g
- ஆவாரம் பூ- 100g
- கோரங்கிழங்கு - 50g
- கல்பாசி - 50g
- அதிமதுரம் - 100g
- பச்சிலை - 100g
- மரிக்கொழுந்து - 100g
- திருமஞ்சணபட்டை - 150g
- பாசிப்பயறு - 50g
- கடலைப் பருப்பு - 100g
- வேப்பிலை - 1 கைப்பிடி
எப்படி தயாரிப்பது?
முதலில் இந்த அனைத்து பொருட்களையும் வெளியிலில் நன்கு உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்து எடுத்தால் போதும் நலங்கு மாவு ரெடி.
அடுத்து ஒரு கிண்ணத்தில் நலங்கு மாவு பொடியை எடுத்து அதில் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ளவும்.

இதை முகத்தில் தடவி சுமார் 30 நிமிடங்களுக்கு அப்படி விட்டுவிடவும்.
இதற்கடுத்து கொஞ்சம் காய்ந்ததும் முகத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மெதுவாக மசாஜ் செய்யவும்.
இந்த நலங்கு மாவை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் நன்கு பொலிவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |