முகச்சுருக்கம் நீங்கி எப்போதும் அழகாக இருக்க உதவும் Facepack.., எப்படி தயாரிப்பது?
முகத்தில் சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முகத்தில் சுருக்கம் விழாமல் இளமையாக உதவும் Facepackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் முட்டையிலிருந்து வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
பின் இதனை நன்கு கலந்து முகத்தில் தடவவும்.
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விட்டு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- கேரட்- 2
- பாதாம் எண்ணெய்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் கேரட்டுகளை எடுத்து, தோலுரித்து வேகவைத்து எடுத்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
பின் இதில் பாதாம் எண்ணெயைச் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
இதற்கடுத்து இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
- பப்பாளி- 2 துண்டு
தயாரிக்கும் முறை
முதலில் பப்பாளிபழத்தை தப்பிக்க மசித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |