முகப்பரு நீங்கி முகம் மென்மையாக மாற உதவும் 2 பொருள்: எப்படி பயன்படுத்துவது?
பல பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முகப்பரு தான்.
என்னதான் நம் முகம் வெள்ளையாகவும் பொலிவாகவும் இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது.
அந்தவகையில், முகப்பருக்களை நிரந்தரமாக நீக்க இந்த இரண்டு பொருளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, தேன் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் முகத்தை சுத்தமான நீரால் கழுவி அதற்கடுத்து இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு உலரவிடவும்.
அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து முகத்தை கைகளால் நன்கு மசாஜ் செய்யவும்.
இதற்கடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகப்பரு நிரந்தரமாக நீங்கி முகம் மென்மையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |