நரைமுடியை இயற்கையாக கருப்பாக்க உதவும் டை.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அதேபோல், இன்றைய காலத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று நரைமுடி.
அந்தவகையில், நரைமுடியை இயற்கையாக கருப்பாக்க உதவும் டையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் ஓடு- 1
- வசம்பு - 1
- விளக்கெண்ணெய் - 3 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் தேங்காய் ஓட்டை மற்றும் வசம்பை தீயில் வாட்டி கருப்பானதும் இதனை ஆறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் இதனை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் அரைத்த பொடியை கலந்து இந்த கலவையை தலைமுடியில் தடவவும்.
இதற்கடுத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலையை மென்மையான ஷாம்பு பயன்படுத்தி அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் நரைமுடி இயற்கையாக நிரந்தரமாக கருப்பாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |