முடி உதிர்வை தடுத்து முழங்கால் வரை வளர்க்க இந்த ஒரு எண்ணெய் போதும்: எப்படி தயாரிப்பது?
அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகை எண்ணெய்யை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- மருதாணி- 1 கைப்பிடி
- வேப்பிலை- 1 கைப்பிடி
- சின்னவெங்காயம்- ¼ kg
- நெல்லிக்காய்- ¼ kg
- தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸியில் கறிவேப்பிலை, மருதாணி, வேப்பிலை, சின்ன வெங்காயம், நெல்லிக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பின் அதனை நன்கு வடிகட்டி அதன் சாறை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெயை சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
பின்னர் தேங்காய் எண்ணெயில் அரைத்து வடிகட்டி வைத்திருந்த சாறை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
15 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அனைத்து அதனை மூடி போட்டு ஒரு நாள் முழுக்க அப்படியே விட்டுவிட வேண்டும்.
பின் மறுநாள் காலையில் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேர்த்து தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |