ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்கும் அதிசய எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
இன்றைய காலகட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் இருக்கிறது.
அந்தவகையில், ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்கும் அதிசய எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம்- 3 ஸ்பூன்
- வெந்தயம்- 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- கரிசலாங்கண்ணி பொடி- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தி அரைத்த கலவைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
எண்ணெய் நன்கு ஆறியதும் அதனை வடிகட்டி தலைமுடியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |