நரைமுடிக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை கருப்பு எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
இன்றைய காலகட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் இருக்கிறது.
அந்தவகையில், நரைமுடிக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை கருப்பு எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- வெள்ளை எள்ளு- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு வாணலில் வெந்தயம், வெள்ளை எள்ளு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கறுப்பாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாட்டிலில் அரைத்த பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து ஒரு நாள் முழுக்க அப்படியே வைக்கவும்.
இதற்கடுத்து இந்த எண்ணெயை தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி நிரந்தரமாக கருமையாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |