நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை டை: எப்படி தயாரிப்பது?
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை டையை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 200g
- கருப்பு தேநீர்- 2 கப்
- காபி தூள்- 1 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
- கிராம்பு பொடி- ½ ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- ½ ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மருதாணிப் பொடியுடன், அதனுடன் கருப்பு தேநீர் தண்ணீரைச் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இப்போது அதில் நெல்லிக்காய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், கிராம்பு தூள், தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த பேஸ்டை 8 மணி நேரம் மூடி வைக்கவும், இதனால் நிறம் அடர் நிறமாக மாறும்.
இதற்கடுத்து தலைமுடியைக் மென்மையான ஷாம்பு கொண்டு அலசி உலர வைக்கவும்.
இறுதியாக வேர்கள் முதல் உச்சந்தலை வரை மருதாணி கலவையை தடவி 3 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி காயவைக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |