அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு இந்த இரண்டு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு செம்பருத்தி மற்றும் வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
முடி வளர்ச்சிக்கு வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தலைமுடியிலிருந்து பொடுகை நீக்குகின்றன.
மேலும், வெங்காயம் முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கி முடியை அடர்த்தியாகவும் ஆக்குகிறது.
இதற்கு முதலில் வெங்காயச் சாற்றை எடுத்து அதனை முடியை லேசாக மசாஜ் செய்து, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் கழுவவும்.
இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை தொடர்ந்து செய்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.
முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி
செம்பருத்தி முடிக்கு ஊட்டச்சத்தை அளித்து முடி சரியாக வளரும் மற்றும் முடி பளபளப்பாக இருக்கும்.
செம்பருத்தி பூவின் இலைகளை நன்கு அரைத்து, தலைமுடியில் தடவி லேசாக மசாஜ் செய்யவும்.
பின்னர் சுமார் 25 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
இந்த செம்பருத்தி கலவையை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர தலைமுடி அடர்த்தியாக வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |