முடி உதிர்வை நிரந்தரமாக கட்டுப்படுத்த உதவும் வெந்தயம்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், முடி உதிர்வை நிரந்தரமாக கட்டுப்படுத்த வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 1 மூடி
- வெந்தயம்- 3 ஸ்பூன்
- முட்டை- 1
எப்படி பயன்படுத்துவது?
முதலில் வெந்தயத்தை இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
பின் துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் வெந்தயம், தேங்காய் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வடிகட்டி முட்டையின் வெள்ளை கருவினை சேர்த்து நன்கு கலக்கவும்.
இதற்கடுத்து தலை முடியின் உச்சி முதல் வேர் வரை தடவி 20 நிமிடம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலை முடியினை அலசி கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நிரந்தரமாக நின்றுவிடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |