அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை Hairpack.., எப்படி தயாரிப்பது?
அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் இயற்கை Hairpackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இலைகள் மிதமான தீயில் கருப்பாக மாறும் வரை சூடாக்கவும்.
பின் இதை ஆறவைத்து எண்ணெயை வடிகட்டி, உச்சந்தலையிலும் முடியிலும் தடவி இரவு முழுவதும் விட்டுவிட்டு, ஷாம்பூவால் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் தூள்- 2 ஸ்பூன்
- தயிர்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் பொடி மற்றும் தயிர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலக்கவும்.
இந்த பேஸ்டை முடியின் நுனி வரை தடவி 40 நிமிடங்கள் அப்படியே வைத்து பின் லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- ஆமணக்கு எண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலந்து மென்மையான பேஸ்ட்டை போல் உருவாக்கவும்.
பின் இதனை உச்சந்தலை மற்றும் முடியில் தடவி, 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு லேசான ஷாம்பூகொண்டு கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |