வலுவான கூந்தலை பெற உதவும் இயற்கை சீரம்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், வலுவான கூந்தலை பெற உதவும் இயற்கை சீரத்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கருஞ்சீரகம் 2 ஸ்பூன்
- ஆளி விதைகள்- 3 ஸ்பூன்
- கிராம்பு- 8
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம், கருஞ்சீரகம், ஆளி விதைகள் மற்றும் கிராம்பு சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரைத்த பொடிகளைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும்.
பின் ஒரு 5 நிமிடங்களுக்குப் பிறகு மிதமான சூட்டில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் பருத்தி துணியில் காய்ச்சிய கலவையை ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி இதனுடன் 2 வைட்டமின் ஈ மாத்திரைகளைச் சேர்த்துக் கொண்டால் போதும் கூந்தலை வலுவாக்கும் சீரம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |