முடி உதிர்வை குறைக்க உதவும் இயற்கை ஷாம்பு.., எப்படி தயாரிப்பது?
கடைகளில் விற்கப்படும் ஷாம்பூக்களில் அதிகளவு இரசாயனங்கள் கலக்கப்படுவதால் முடிஉதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
அதன்படி, இயற்கை முறையிலான ஷாம்பூவை பயன்படுத்தினால் முடி உதிர்வு நிரந்தரமாக நீங்கும்.
அந்தவகையில், வீட்டிலேயே முடி உதிர்வை குறைக்க உதவும் இயற்கை ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 1 கப்
- செம்பருத்தி பூ- 10
- செம்பருத்தி இலை- 5
- கற்றாழை- 2 துண்டு
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, கற்றாழையை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
பின் இதனை கைகளால் நன்கு பிசைந்து கலந்துகொள்ளவும்.

தொடர்ந்து 10 நிமிடம் நன்கு பிசைந்தால் நன்கு நுரைத்து வரும். பின் இதனை வடிகட்டிக்கொள்ளவும்.
இதனை தலைமுடிக்கு ஷாம்புவாக பயன்படுத்தி குளிர்ந்த நீரால் முடியை அலசிக்கொள்ளலாம்.
இந்த மூலிகை ஷாம்பூவை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்துவதால் கூந்தல் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |