ஒரே வாரத்தில் சரும பொலிவை அதிகரிக்க உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், ஒரே வாரத்தில் சரும பொலிவை அதிகரிக்க உதவும் எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
- பாதாம் எண்ணெய்- ½ கப்
- கேரட்- 1
- ஆரஞ்ச் தோல்- 1
- பீட்ரூட்- 1
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும்.
இதையடுத்து கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவி எண்ணெய்யில் சேர்க்கவும்.
அதன் பின் சிறிதளவு ஆரஞ்சு தோலையும் உடன் சேர்த்து 10 நிமிடங்களுக்கு நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
பின்னர் இது சூடு ஆறியதும் காய்ச்சி எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கலாம்.
பின்னர் இந்த எண்ணெய்யைக் கொண்டு முகத்தில் மேல்நோக்கி மசாஜ் செய்யவும்.
இதனைத்தொடர்ந்து கண்களுக்கு கீழ் மற்றும் கன்னத்தில் நன்றாக அப்ளை செய்யவும்.
இந்த எண்ணெயை தொடர்ந்து முகத்தில் பயன்படுத்தி வர முகம் நன்கு வெள்ளையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |