Peanut Butter: சுவையான பீனட் பட்டர்.., 10 நிமிடத்தில் வீட்டிலேயே தயாரிக்கலாம்
இந்த பீனட் பட்டர் காலை வேலையில் சப்பாத்தி, பிரட்டில் தடவி சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
பீனட் பட்டரில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஃபோலேட், தாமிரம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் செலினியம் ஆகியவற்றில் காணப்படுகிறது.
பீனட் பட்டர் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு ஆகிய இரண்டிற்கும் பயன்படுகிறது.
வீட்டிலேயே எளிமையான முறையில் சுவையான பீனட் பட்டர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வறுத்த வேர்க்கடலை- 600g
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
- வெல்லம்- 50g
- கோ கோ பவுடர்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் 200g வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே மிக்ஸி ஜாரில் மீதமுள்ள வேர்க்கடலையை சேர்த்து அரைத்து அதில் எண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் தேன், வெல்லம், உப்பு, கோகோ பவுடர் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைக்க அரைக்க வேர்க்கடலையில் இருந்து எண்ணெய் பிரிந்து நன்கு மென்மையான பீனட் பட்டர் கிடைக்கும்.
அடுத்து முன்பு அரைத்து வைத்திருந்த கொரகொரப்பான வேர்கடலையை இதில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளலாம்.
இதை ஒரு டப்பாவில் சேகரித்து அவ்வப்போது பயன்படுத்தி கொள்ளலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |