முகம் வசீகரமாக மாற உதவும் ரோஸ் ஜெல் - வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், முகம் வசீகரமாக மாற உதவும் ரோஸ் ஜெல் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை - 3 ஸ்பூன்
- கிளிசரின் - ½ ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் - 4 சொட்டுகள்
- ரோஜா - 2
- தண்ணீர் - 1 கிளாஸ்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு வாணலில் தண்ணீர் மற்றும் ரோஜா இதழ்களை சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
10 நிமிடங்களில் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
இப்போது காற்று புகாத கொள்கலனை மாற்று அதில் கற்றாழை ஜெல், கிளிசரின் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது அதில் 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த இயற்கையான ரோஸ் ஜெல்லை உங்கள் முகத்தில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தினமும் இரவில் தூங்கும் முன் இந்த ஜெல் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |