சருமத்தின் அழகை மெருகூட்டும் ரோஸ் வாட்டர்..! வீட்டிலேயே செய்வது எப்படி?
பொதுவாகவே பெண்கள் என்றாலே தங்களது சருமத்தை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
அதற்காக பல விதமான பொருட்களையும் பல விதமான முயற்சியையும் எடுப்பது வழக்கம்.
உலகில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருந்து முறைகளிலும் ரோஸ் வாட்டருக்கு முக்கிய இடம் உள்ளது. ரோஸ் வாட்டர் அழகு சிகிச்சையில் இருந்து உணவின் சுவையை அதிகரிக்கும் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ரோஸ் வாட்டர் என்றால் ரோஜா இதழ்களில் இருந்து எடுக்கப்படும் நீராவியாகும். இதை பலரும் சந்தையில் தான் வாங்குவார்கள்.
ஒரு சில நாட்களில் இந்த ரோஸ் வாட்டரின் விலையில் பாரிய எழுச்சியும் காண்ப்படும். அதிகமாக பணத்தை செலவழித்து இந்த ரோஸ் வாட்டரை வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எப்படி இலகுவான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வீட்டில் ரோஸ் வாட்டர் தயாரிக்கும் முறை
-
முதலில் ஒரு செப்பு பாத்திரத்தில் 20 லீற்றர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- பின் 45 கிலோ ரோஜாப் பூக்களையும் சேர்த்து, 5-7 மணி நேரம் உலையில் கொதிக்க வைக்க வேண்டும்.
-
அடுத்து செப்பு பாத்திரத்தில் ஒரு வெற்று மூங்கில் செய்யப்பட்ட குழாயை வைக்கவும்.
- இதன் மூலம் நீராவி அதன் வழியாக பிரித்தெடுக்கப்படும்.
-
ரோஜா 7-8 மணி நேரம் கொதிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் நீராவி மூங்கில் மரத்தின் குழாய் மூலம் வேறு ஒரு பாத்திரத்தில் சேகரிக்கப்படும்.
- 45 கிலோ ரோஜாக்களில் இருந்து 35 லிட்டர் தண்ணீர் வரை பிரித்தெடுக்கலாம்.
இதை அழகுசாதனப் பொருட்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் சமையலுக்கும் பயன்படுத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |