One in, one out திட்டம்: பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் யார்?
பிரித்தானியாவும் பிரான்சும் புலம்பெயர்ந்தோரை தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் One in, one out திட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் யார் என்பது மூன்று கட்ட செயல்முறை மூலம் முடிவு செய்யப்பட உள்ளது.
யார் யார் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்?
முதலாவதாக, அவர்கள் முதல் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த ஆண்டிற்கான புகலிடக்கோரிக்கை புள்ளிவிவரங்களின்படி முடிவெடுக்கும் நிலையில், அவர்கள் சூடான், ஏமன், சிரியா அல்லது எரித்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, பிரித்தானியா வர விண்ணப்புக்கும் புலம்பெயர்ந்தோர், தங்களுக்கு பிரித்தானியாவுடன் தொடர்பு இருப்பதைக் காட்ட வேண்டும்.
அதாவது, கடந்த 5 ஆண்டுகளில், அவர்கள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக அனுமதி பெற்று பிரித்தானியாவில் தங்கியிருந்திருக்கவேண்டும், நிபந்தனைகளை மீறியிருக்கக்கூடாது, அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் காலகட்டத்துக்கு பிரித்தானியாவில் தங்கியிருந்திருக்கக்கூடாது.
மூன்றாவதாக, முதல் இரண்டு நிலைகளில் தேர்ச்சி பெற்ற புலம்பெயர்ந்தோரிலிருந்து சிலர் பிரித்தானியாவுக்கு வருவதற்காக (random முறையில்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |