சாப்பிட்டவுடன் வயிறு வீங்கியது போன்று இருக்கா; அப்போ இத மட்டும் குடிங்க!
பொதுவாகவே ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடனே வயிறு ஊதியது போன்று இருக்கும். அதற்கு சரியான காரணம் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
இவ்வாறு ஏற்பட்டால் ஏற்பட்டால், உடலுக்குள் வயிறு நிரம்பியதாகவும், இறுக்கமாகவும், லேசான வயிற்று வலி இருப்பது போன்றும் தோற்றமளிக்கும்.
ஆகவே அது ஏன் சாப்பிட்டவுடன் வீங்குகின்றது மேலும் அதை எவ்வாறு தடுக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
சாப்பிட்டவுடன் வயிறு வீங்குவது ஏன்?
இவ்வாறு வீங்குவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். அதிகப்படியாக உணவு சாப்பிடுவது, விரைவாக உணவை சாப்பிடுவது, சரியாக மெல்லாமல் உணவை அப்படியே விழுங்குவதாலும் இது ஏற்படும்.
மேலும் உணவை உடைக்கும் பொழுது அதிலிருந்து வரும் வாயுக்கள் வெளியேறாமல் வயிற்றிலே தங்கிவிடுவதாலும் வயிறு வீங்குகின்றது.
இதிலிருந்து விடுப்படுவது எப்படி?
ஒரே நேரத்தில் உணவை சாப்பிடாமல் சிறிய அளவுகளாக பிரித்து சாப்பிடுவது நல்லது. அவ்வாறு செய்தும் இதிலிருந்து வெளிவர முடியவில்லை என்றால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த பானத்தை செய்து குடித்தால் நல்லது.
அந்த பானத்தை தயார் செய்வது எப்படி?
-
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
- தண்ணீர் கொதித்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு தே.கரண்டி துருவிய இஞ்சி, 5 இல் இருந்து 6 புதினா இலைகள், ஒரு தே.கரண்டி வெந்தய விதைகள் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் வடிக்கட்டி அந்த நீரை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதனுடன் எழுமிச்சை சாறு ஒர துளி சேர்த்து, வெதுவெதுப்பாக பருகி வந்தால் வயிறு வீங்குவதில் இருந்து விடுப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.