மூன்றே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்த உதவும் எளிய வீட்டு வைத்தியம்
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
ஒழுங்கற்ற உணவு, ஊட்டசத்து குறைபாடு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
அந்தவகையில், மூன்றே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்த உதவும் எளிய வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- தண்ணீர் - 1 கப்
- செம்பருத்தி பூ - 1
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்த கறிவேப்பிலையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் செம்பருத்தி பூவை சுத்தம் செய்து கொதிக்கவைத்த தண்ணீரில் சேர்க்கவும்.
இதற்கடுத்து இதை 3 நிமிடங்கள் அப்படியே மூடிபோட்டு வைக்கவும்.
பின்னர் இந்த நீரை வடிகட்டி குடிக்கலாம். இந்த தேநீரை தொடர்ந்து 3 வாரங்கள் குடித்து வர முடி உதிர்வு நிரந்தரமாக நின்றுவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |