இந்த எண்ணெய் ஒரு சொட்டு இருந்தால் போதும்... கருவளையம் உடனே மறைந்துவிடும்
பொதுவாகவே தூக்கம் விழித்து வேலை செய்பவர்களுக்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படும்.
கருவளையங்கள் ஏற்படுவதற்கான வேறு சில காரணங்களில் ஒவ்வாமை, தைராய்டு நிலைகள் மற்றும் முதுமை ஆகியவையும் அடங்கும்.
தோலின் நிறத்தைப் பொறுத்து கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் ஊதா அல்லது கருப்பு நிறமாகத் தோன்றலாம்.
சில சமயங்களில், உணவுப் பழக்கம் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களின் காரணமாகவும் ஏற்படும்.
எனவே இதை எப்படி நீக்கலாம் எனவும் இது எதனால் ஏற்படுகின்றது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
காரணங்கள்
-
தூக்கமின்மை
-
ஒவ்வாமை
-
இரத்த சோகை
- கண்களை அடிக்கடி தேய்த்தல்
- முதுமை
- புகைபிடித்தல்
-
பரம்பரை மரபணுக்கள்
-
தைராய்டு
-
நீரிழப்பு
- கண் சொட்டு சிகிச்சை
இதை எப்படி நீக்கலாம்?
கண்ணின் கருவளையத்தை நீக்குவதற்கு பாதாம் எண்ணையை பயன்படுத்தலாம். இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் கருவளையம் மறைந்து விடும்.
வைட்டமின் A D E மெக்னீசியம் கொழுப்பு மற்றும் அமிலங்களை கொண்ட பாதாம் எண்ணையை கருவளையம் உள்ள இடத்தில் தடவினால் ஒரு சில நாட்களில் கருவளையம் மறையும்.
இதை இரவு நேரத்தில் தடவி மசாஜ் செய்து வர உடனே நீக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |