அக்குள் கருமையை நிரந்தரமாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம்
அக்குளில் உள்ள கருமை நிறம் பலருக்குக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனை வியர்வை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
அந்தவகையில், அக்குள் கருமையை நிரந்தரமாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பாரக்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தயிர்- 3 ஸ்பூன்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் கடலை மாவை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு குளிர்ந்த நீரால் தேய்த்து கழுவ வேண்டும்.
இந்த பேக் அக்குளில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றுவதோடு, கருமையையும் நீக்க உதவும்.
2.தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 3 ஸ்பூன்
- எலுமிச்சை- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பஞ்சுருண்டையை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும்.
இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் பயன்படுத்தி வர, அக்குள் கருமை நீங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |