மழைக்காலத்தில் தொண்டை வலி பிரச்சனை? சீக்கிரமாக குணமடைய இப்படி செய்திடுங்கள்
சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் தொண்டைவலியை குணப்படுத்த வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே குணப்படுத்தலாம்.
வைரஸினால் ஏற்படும் சளி, இருமலை விரட்ட மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சீக்கிரமாக குணப்படுத்த உதவும் ஒரு சில உணவு பொருட்களை பற்றி பார்க்கலாம்.
மஞ்சள் பால்
நம்முன்னோர்கள் பயன்படுத்திய வைத்திய முறைகளில் ஒன்று தான் இந்த மஞ்சள் பால்.
ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மஞ்சள் தூள் சேர்த்து குடித்தால் தொண்டை வலியை சரிசெய்யவும், தொண்டைக்கு நல்ல இதமாகவும் இருக்கும்.
இஞ்சி டீ
சளி இருமல்களால் ஏற்படும் தொண்டை வலியை குணப்படுத்த மற்றொரு வழிதான் இந்த இஞ்சி டீ.
இஞ்சி டீயில் சிறிதளவு மிளகு சேர்த்து பருகும்பொழுது அது தொண்டை வலியை சரிசெய்ய ஒரு நல்ல தீர்வாக அமையும்.
துளசி சாறு
மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல், தொண்டைவலி போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக இந்த துளசி இலைகள் அமையும்.
இந்த துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக குடிக்கும் போது சளியை குறைக்கவும், தொண்டை வலிக்கு நிவாரணமாக இருக்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
எனவே எலுமிச்சை சாறை சூடான தண்ணீரில் கலந்துக் குடிக்கலாம்.