சாப்பிட்டதும் வயிறு உப்பிடுதா? அப்போ இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!
பொதுவாகவே ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடனே வயிறு உப்பிக்கொண்டு வந்துவிடும். இது எதனால் வருகின்றது என்று தெரியாமல், ஒரு சிலர் தொப்பை போட்டு விட்டது என்று நினைத்து உடற்பயிற்சி செய்து வருவார்கள்.
உடலில் நடக்கும் ஒரு சில விடயத்திற்கு மூலக்காரணம் என்னவென்று தெரியாமல் எப்போதும் ஒரு தீர்வை எடுக்கக்கூடாது. ஆகவே சாப்பிட்டவும் வயிறு உப்பிக்கொண்டு வருவதற்கான காரணம் பற்றியும் இதற்கான தீர்வு பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சாப்பிட்டவுடன் வயிறு உப்புவது ஏன்?
சிலருக்கு எப்போதுமே அஜீரணக் கோளாறு இருந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்பியது போல இருக்கும்.
இதற்கு மூலக்காரணம் மலச்சிக்கல் பிரச்சினை தான். இது தொடரும்போது நாள்பட்ட அஜீரணக் கோளாறு பிரச்சினையை ஏற்படுத்தும்.
வயிறு உப்பசம், தொப்பை, உடல் பருமன், வளர்சிதை மாற்றக் கோளாறு தொடங்கி புற்றுநோய் வரை ஆபத்துக்களைக் கொண்டு வர வாய்ப்புண்டு.
எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து இதை எப்படி சரிசெய்யலாம் என பார்க்கலாம்.
- அஜீரணக் கோளாறால் அவதிப்படுகிறவர்கள் தினமும் புதினா டீயை எடுத்துக் கொள்வது நல்ல பலன் கொடுக்கும்.
- சோம்பை அரை ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இந்த பிரச்சினை சரியாகும்.
-
இஞ்சியை டீயில் சேர்த்துக் கொள்வது தொடங்கி எல்லா உணவுகளிலும் எடுத்துக்கொள்வது நல்லது.
- நாள்பட்ட அஜீரணக் கோளாறை சரிசெய்ய கெமோமில் டீயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
- இலவங்கப்பட்டையை டீயாகவோ அல்லது உணவிலோ சேர்த்துக் கொள்ளும்போது வயிற்றில் ஏற்படும் பிரச்சினை குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |