குதிகால் வெடிப்பை நீக்கி பாதங்களை அழகாக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்
பாதங்களில் ஈரப்பதம் இல்லாததால் குதிகால் உலர்ந்து போகுதல் அல்லது விரிசல் போன்றவை ஏற்படும்.
பாதங்களை ஈரப்பதமாக்கி குதிகால் வெடிப்பை அகற்றுவதற்காக சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
அந்தவகையில், குதிகால் வெடிப்பை நீக்கி பாதங்களை அழகாக்க வீட்டில் இல்ல இந்த இரண்டு பொருட்கள் போதும்.
1. கிளிசரின்
ஒரு பவுலில் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை கலக்க வேண்டும்.
பின் கால்களை கழுவிய பின் இந்த கலவையை குதிகால் மீது தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கால்களைக் கழுவவும்.
கிளிசரின் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது இதனால் குதிகால் வெடிப்புகளில் கிளிசரின் பயன்படுத்துவதால் வெடிப்பை குணப்படுத்தும்.
2. தேன்
ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் தேன் சேர்க்கவும்.
இதற்கு பின் கால்களை அதில் நனைத்து 20 நிமிடங்களுக்குப் பிறகு கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.
இதை வாரத்தில் 3 நாட்கள் தொடர்ந்து செய்துவர குதிகால் வெடிப்புகளை குணப்படுத்தும்.
சிறந்த மாய்ஸ்சரைசராகக் கருதப்படும் தேன் குதிகால் வெடிப்புகளை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |