குதிகால் வெடிப்பை போக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்
குதிகால் வெடிப்பு என்பது சருமத்தில் ஈரப்பதம் குறைவதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
வெடிப்பு லேசாக இருக்கும்போது வலியோ அசௌகரியமோ இருக்காது, ஆனால் அது தீவிரமடையும் போது கடுமையான வலி, அரிப்பு மற்றும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.
இது ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் தீவிரமான சரும வறட்சி, அதிக உடல் எடை, உடலில் நீர்ச்சத்து குறைபாடு, மற்றும் தவறான காலணிகளைத் தொடர்ந்து அணிவது.
அந்தவகையில், குதிகால் வெடிப்பை போக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- வினிகர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, தேன் மற்றும் வினிகரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து உலர்த்தி, இந்த கலவையை பாதங்களில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறையும்.
2. தேவையான பொருட்கள்
- வேஸ்லின்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை- 1
எப்படி பயன்படுத்துவது?
முதலில் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பின் உலர்த்த வேண்டும்.
பின்பு வேஸ்லினை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை பாதங்களில் தடவி, சாக்ஸ் அணித்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
பின் காலையில் சாக்ஸை நீக்கிவிட்டு, பாதங்களை கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், குதிகால் வெடிப்பு மறைவதைக் காணலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |