தாங்க முடியாத பொடுகுத் தொல்லையா? இத மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
பொதுவாவே பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் வரும் ஒரே பிரச்சினை பொடுகு தான்.
குறிப்பாக இந்த பிரச்சினையானது இளம் வயதினருக்கும் தான் அதிகமாக ஏற்படக்கூடும். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டால் முடி உதிர்வு ஏற்படும்; தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. அதோடு சில தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படக்கூடும்.
ஆகவே பொடுகு ஏன் வருகின்றது மற்றும் இது ஏற்படுவதால் உடலுக்கு எவ்விதமான தீமைகள் ஏற்படுகின்றது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
பொடுகு ஏன் ஏற்படுகிறது?
வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமற்று இருப்பது போன்ற காரணங்களினால் பொடுகு பிரச்சினையானது உருவாகின்றது.
இதை தீர்க்க சிறந்த வழி இருப்பதாக கூறி பல பொருட்களை கடைகளில் விற்பனை செய்கின்றனர். இதனால் முடி உதிர்வு தான் அதிகமாக ஏற்படக்கூடும்.
வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் எப்படி பொடுகு தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம் என இந்த பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்-எலுமிச்சைச் சாறு மசாஜ்
எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் 2 தே.கரண்டி சேர்த்து, தலைமுடியில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பின் ஷாம்பூ தேய்த்து, தலையை அலசி எடுத்து வர பொடுகு தொல்லையானது நீங்கும்.
தயிர் தேய்த்துக் குளியல்
முதலில் தயிரை நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். இதை சைனஸ், ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பேக்கிங் சோடா பேக்
முதல்லி ஈரமான முடியில் பேக்கிங் சோடாவை தேய்க்கவும். தேய்த்து இரண்டு நிமிடத்தில் முடியை தண்ணீரில் கழுவ வேண்டும். இது செய்வதன் மூலம் தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். மற்றும் பொடுகு தொல்லையானது முற்றிலும் நீங்கும்.
வேப்பிலை கசப்பு
வேப்பிலையை முதல்லி பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
மருதாணி இலை
கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை ஆகியோர் தவிர்க்கவும்.
மேலும் இந்த முறையில் முடியை பராமரிப்பதன் மூலம் முடியும் வளர்ச்சி பெறும். தலையில் உள்ள பொடுகு தொல்லையும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |