கருவளையம் வந்து முகம் பொலிவு இல்லாமல் இருக்கா?
ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் பொதுவாக பாதிக்கப்படும் ஒரு பிரச்சினை தான் கருவளையம்.
இது எதனால் ஏற்படுகின்றது என்று யோசித்து பார்த்தால் பல காரணங்கள் காணப்படும். அதிலும் முக்கியமாக தூக்கத்தை கூறலாம்.
ஏனென்றால் போதியளவு தூக்கம் இல்லையென்றால் முகத்தில் கருவளையம் இருக்கும்.
ஒரு சிலருக்கும் மனஅழுத்தம் அதிகமாக இருந்தாலும் கண்ணின் கீழ்ப்பகுதியில் கருவளையம் ஏற்படும்.
முகம் சற்று பொலிவிழந்து வயதான தோற்றத்திலும் காணப்படும். இதை சரிசெய்வதற்கு பலரும் பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பீர்கள்.
அதை எல்லாம் கைவிட்டு இயற்கையான முறையில் வெறும் மூன்றே நாட்களில் இந்த கருவளையத்தை எப்படி சரி செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் ஒரு சொட்டு உள்ளங்கையில் எடுத்து கண்ணின் கீழ்ப்பகுதியில் பூச வேண்டும்.
இரவில் தூங்குவதற்கு முன்பாக கண்ணுக்கு கீழ் தடவி தடவி விட்டு காலையில் முகம் கழுவினால் கருவளையம் குறையும்.
இதை தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |