பெண்களே உங்கள் தொடை கருப்பா இருக்கா? இதனை எப்படி எளிய முறையில் போக்கலாம்?
Beauty tips
Leg
By Kishanthini
பெரும்பாலும் நம்மில் சில பெண்களுக்கு உள்தொடை கருப்பாக காணப்படும்.அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
ஹார்மோனல் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும்.
தொடையை மறைப்பது மட்டுமே இதற்கான தீர்வாக முடியாது. சில எளிய வீட்டு வைத்திய முறைகள் இங்கே உள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்போம்.
- எலுமிச்சையை இரண்டாக வெட்டி, தொடையில் 15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின் துணியால் அப்பகுதியை துடைத்துவிட்டு, ஆலிவ் ஆயில் தடவ வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால், தொடையில் உள்ள கருமை மறையும்.
- எலுமிச்சை சாற்றினை தொடையில் தடவி, பின் சர்க்கரை கொண்டு மென்மையாக 15 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் தொடையில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி கருமையும் நீங்கும்.
- 1 டீஸ்பூன் பால் பவுடர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அத்துடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, தொடையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனாலும் தொடையில் இருக்கும் கருமை மறையும்.
- ஓட்ஸ் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, தொடையில் தடவி 15-30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த பேக்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளதால், இது தொடையில் உள்ள கருமையை வேகமாக மறையச் செய்யும்.
- சந்தனப் பவுடரை வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் தொடையில் தடவி உலர வைத்து கழுவி வர, தொடை வெள்ளையாகும்.
- இரவில் தூங்கும் முன், இந்த மூன்றையும் ஒரே அளவில் ஒன்றாக கலந்து, தொடையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.
- கடலை மாவு, தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சளை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, தொடையில் தடவி உலர வைத்து கழுவி வர, தொடையில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, தொடை வெள்ளையாகும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US