முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க உதவும் உளுந்து.., எப்படி பயன்படுத்துவது?
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது முகம் கருப்பாக மாறிவிடுகின்றன.
அவ்வாறு கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி நம் சரும அழகையே கெடுத்துவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உளுந்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 3 ஸ்பூன்
- பால்- 1 கப்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உளுந்தை இரண்டு முறை நன்கு கழுவி அதனை பாலில் 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
பிறகு நன்கு ஊறியதும் அதனை நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை முகத்தில் 20 நிமிடம் அப்படியே வைக்கவும்.

இதற்கடுத்து நன்கு உலர்ந்ததும் தண்ணீர் சேர்த்து லேசாக மசாஜ் செய்து கழுவிக்கொள்ளலாம்.
இதனை வாரம் ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள், கருவளையம் சரியாகும்.
மேலும், முகம் கூடுதல் பொலிவுடன் பளபளப்பாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |