வறட்டு இருமலை விரட்டியடிக்கும் வீட்டு வைத்தியம்
வறட்டு இருமல் கொரோனாவின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருப்பதால், அதைப் புரிந்துகொள்வதும், வறட்டு இருமலுக்கான வீட்டு வைத்தியம் குறித்து அறிந்துக்கொள்வதும் மிகவும் மிக்கியமான விடயமாகும்.
இதற்கு வீட்டு வைத்தியம் மற்றும் மருந்துகள் நிவாரணம் அளிக்க உதவும். அதற்கு என்ன செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.
சுத்தமான தேன்
வறட்டு இருமலுக்கான பழமையான வீட்டு வைத்தியம் தேன். இது பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறந்த தீர்வாகும். ஆனால் இது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படக்கூடாது.
உங்கள் வறட்டு இருமலைக் கட்டுப்படுத்த ஒரு தேக்கரண்டி தேனை தினமும் ஒன்று முதல் மூன்று முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
மஞ்சள்
வறட்டு இருமலுக்கான பழமையான வீட்டு வைத்தியம் மஞ்சள். இதில் குர்குமின் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை அழிக்கும்.
சூடான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சளைச் சேர்த்து, இரவில் தூங்கும் முன் சாப்பிடலாம். மேலும், 500 மில்லிகிராம் மஞ்சள் தூளை ஒரு நாளைக்கு இரண்டு முறை நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.
இஞ்சி
வறட்டு இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஒரு கப் வெந்நீரில் அரை டீஸ்பூன் இஞ்சித் தூளை தினமும் மூன்று முறை சேர்த்துக் குடிக்கவும். ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு மற்றும் பச்சை தேன் கலந்து தினமும் இரண்டு முறை எடுத்துக்கொள்ளலாம்.
உப்பு நீர்
வறட்டு இருமலுக்கான வீட்டு வைத்தியமாக உப்புநீரை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் வறட்டு இருமலினால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கிறது.
ஒரு கிளாஸ் முழுக்க வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் ஒன்றரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறவும். உப்புநீரை நீங்கள் துப்புவதற்கு முன், கொப்பளிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |