எப்போதும் உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும் வீட்டு வைத்தியம்
பெண்கள் எப்பொழுதும் தங்கள் உதடுகளை அழகாக வைத்து கொள்ளத்தான் விரும்புவார்கள்.
உதடுகள் வெடிப்பு இல்லாமல் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் என்று தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.
அந்தவகையில், உதடுகளை எப்போதும் மென்மையாக வைத்துக்கொள்ள உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

கற்றாழை ஜெல்- கற்றாழை ஜெல் உதடுகளில் உள்ள வறட்சியும் வெடிப்பும் போக்க தினமும் 2-3 முறை தடவலாம்.
தேங்காய் எண்ணெய்- தேங்காய் எண்ணெய் உதடுகளை ஈரப்பதத்துடன் மென்மையாக வைத்து வெடிப்புகளைத் தடுக்கும்.
தேன்- தேனை கிளிசரினுடன் கலந்து தடவினால் உதடுகள் இயற்கையாக ஈரப்பதமாகவும் அழகாகவும் இருக்கும்.
க்ரீன் டீ பேக்- க்ரீன் டீ பேக்கை உதடுகளில் வைத்தால் வறட்சியால் ஏற்படும் வெடிப்புகளில் நிவாரணம் கிடைக்கும்.
கொக்கோ பவுடர்- கொக்கோ பவுடர் கலந்த நேச்சுரல் லிப் பாம் உதடுகளை எப்போதும் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |