கோடையில் வறண்ட சருமத்தை மென்மையாக்க இந்த 2 பொருட்கள் போதும்
வெயில் காலம் என்றாலே நம் சருமத்தில் பல பிரச்சனைகள் வந்தடைகின்றன.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் இந்த முறை பராமரிப்புக்களை செய்து பாருங்கள்.
சருமத்திற்கு கற்றாழை
வெயில் காலத்தில் சருமத்தை அடிக்கடி சுத்தம் செய்வதனால் சருமம் வறண்டு போய்விடும், எனில் சருமம் வறண்டு போகாமல் இருக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.
கற்றாழை ஆண்டிசெப்டிக், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு போன்ற பல பண்புகளைக் கொண்டுள்ளது.
இதில் உள்ள பண்புகள் அனைத்தும் சருமத்திற்கு நன்மைகளை அளிக்கின்றன.
குளித்த பிறகு அல்லது முகத்தை சுத்தம் செய்த பிறகு சிறிது அளவு கற்றாழை ஜெல்லை எடுத்து உடலிலும் மற்றும் முகத்திலும் மசாஜ் செய்யலாம்.
அல்லது சருமத்திற்கு இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.
சருமத்திற்கு கிளிசரின்
வறண்ட சருமத்திற்கு இரவு மற்றும் பகலில் கிளிசரின் பயன்படுத்தலாம்.
கிளிசரின் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. ரோஸ் வாட்டரில் கிளிசரின் கலந்து சருமத்தில் தடவலாம்.
காலை அல்லது இரவில் உங்கள் முகத்தை சுத்தம் செய்து பின்னர் சருமத்தில் தட வேண்டும்.
இவற்றை பயன்படுத்தும் போது சருமத்தை ஈரப்பதமாக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சருமத்திற்கு ஏற்ற சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்தவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |