கண்கள் குளிர்ச்சியடைந்து பார்வை எப்போதும் பிரகாசமாக இருக்கனுமா? எளிதான வழி இதோ
கண்கள் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். அதனை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
கண்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அதற்கு எளிதான தீர்வு குறித்தும் காண்போம்.
கண் எரிச்சல் நீங்க
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு, சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண் ஒளிபெறும்.
கண் பிரகாசம் அடைய
தூது வளைகாயை ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளி பெறும்.
கண் வலி குணமாக
ஒரு கரண்டி சீரகம் தூள் செய்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலை முழுகி வந்தால் குணமாகும்.
கண் நோய் நீங்க
அன்னாசிப்பழம் சாப்பிட கண்நோய் குணமாகும்.
கண்வலி வராமல் தடுக்க
எள் செடிய்யின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும்.
கண்கள் குளிர்ச்சியடைய
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட கண் குளிர்ச்சி பெறும்.