வீட்டில் மூட்டைப்பூச்சி தொல்லையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக...
பொதுவாகவே நல்வாழ்வை அழிக்கக்கூடிய பொதுவான பிரச்சினையாக இருப்பது வீட்டுப் பூச்சியாகும்.
இது படுக்கை, தளபாடங்கள் மற்றும் உங்கள் ஆடைகள் என பல இடங்களில் இருக்கும். இந்த பூச்சிகளில் மிகவும் தொல்லை தரக்கூடியதாக இருப்பது என்றால் அது மூட்மை பூச்சி தான்.
ஒரு பெண் மூட்டைப் பூச்சி தன் வாழ்நாளில் 500 முட்டைகளை இடும். இந்த 500 மேலும் பெருகி, வளர்ந்து கொண்டே போகும்.
தலைமுறைகளாக உற்பத்தியாகி பெருகி கொண்டிருக்கும் இந்த மூட்டைப் பூச்சிகள் தொற்றுகளாகி விட்டது.
இதனால் இந்த பிரச்சனையை சரியான நேரம் பார்த்து கையாளுவது மிகவும் முக்கியமாகும். இது வீட்டில் இருப்பதால் பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றது.
இதை எப்படி விரட்டலாம் என்று தெரியாமல் குழம்பி இருப்பீர்கள். ஆகவே தொல்லை தரமால் இருப்பதற்காக மூட்டைப்பூச்சிகளை விரட்டுவதற்கு சிறந்த வழியை பார்க்கலாம்.
-
தண்ணீர் மற்றும் கிராம்புகளை நன்றாக குலுக்கி, பூச்சிகள் உள்ள பகுதிகளில் தெளிக்க மூட்டைப் பூச்சித் தொல்லை குறையும்.
- டீ ட்ரீ எண்ணெயினை தண்ணீரில் கலந்து மூட்டை பூச்சிகள் அதிகம் உள்ள இடத்தில் தெளித்து விட, பூச்சிகளின் தொல்லை படிப்படியாக குறையும்.
- புதினா இலைகளை கசக்கி படுக்கை மற்றும் தலையணைக்கு அடியில் வைத்து வர மூட்டைப் பூச்சி தொல்லை குறையும்.
- லாவெண்டர் எண்ணெயினை தண்ணீருடன் கலந்து பூச்சிகள் உள்ள இடத்தில் தெளிக்கவும்.
- படுக்கை, தலையணைக்கு அடியில் இந்த இலைகளை வைத்துவிட மூட்டைப் பூச்சி தொல்லை குறையும்.
-
தண்ணீருடன் சோடாவை கலந்து பூச்சிகள் தென்படும் இடத்தில் தெளிக்க பூச்சித்தொல்லை குறையும்.
- வசம்பை தண்ணீரில் ஊற வைத்து பூச்சிகள் உள்ள இடத்தில் தெளித்து வர பூச்சிகள் நீங்கும்.
-
எலுமிச்சைப் புல்லினை அரைத்து தண்ணீரில் கலந்து பூச்சிகள் உள்ள இடத்தில் தெளிக்கவும்.
- சிவப்பு மிளகாய் பொடியை பூச்சிகள் ஒழிந்திருக்கும் இடங்களில் தூவ வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |