நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கலாம்; இதோ சில எளிய வழிகள்
முன்கூட்டிய முதுமை என்பது இன்றைய காலத்தில் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனை.
சிலருக்கு சிறு வயதிலேயே முடி நரைத்துவிடும். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.
அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண்பது அவசியம். முன்கூட்டிய நரை முடியைப் போக்க என்ன இயற்கை வழிகள் உதவும் என்பது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
ரோஸ்மேரி வாட்டர்
அம்பானி குடும்பத்தின் கார் ஒட்டுநர் சம்பளம் எவ்வளவு? - உயர் அதிகாரிகள் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகம்!
ரோஸ்மேரி வாட்டர் மூலம் தலையை மசாஜ் செய்வது, முன்கூட்டிய நரை மற்றும் முடி உதிர்வைத் தடுக்க நல்லது. ரோஸ்மேரி கலந்த நீரால் தலையைக் கழுவுவதும் நல்லது.
மருதாணி இலைகள்
ஒரு கைப்பிடி துளசி இலைகள், மருதாணி இலைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் உலர் நெல்லிக்காய் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து தலையை கழுவி வந்தால், நரை முடி சீக்கிரமாக கருமையாகும். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால், முடி கருமையாகி, சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வெந்தயம்
வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும். இதிலிருந்து வெந்தயத்தை நீக்கிய பின், அந்த நீரில் வெங்காயச் சாறு சேர்த்து, தலையில் தடவி மசாஜ் செய்தால், முடி கருமையாக மாறும். இந்த நீரால் தலையை 20 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவவும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உலர் நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து தலைமுடியில் தடவினால் நரை முடி பிரச்சினை சீக்கிரமாக மாறும்.
காபி பவுடர்
காபி பவுடரை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து உங்கள் தலைமுடியில் தடவவும். இரண்டு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால் நரைத்த முடிகள் சீக்கிரமாக கருமையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |