நரைமுடியை கருப்பாக மாற்ற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
இதற்கு ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.
1. கொய்யா இலை விழுது
முதலில் கொய்யா இலையை பேஸ்ட் செய்து அதனுடன் சம அளவு மெஹந்தி பொடியை சேர்க்கவும்.
பின் அதனுடன் பாதி எலுமிச்சை சாறு சேர்த்து இரும்பு பாத்திரத்தில் 10 நாட்கள் வைக்கவும்.
பின்னர் அதை தலைமுடியில் தடவி 2 மணிநேரம் ஊறவைத்து பின் அலசிக்கொள்ளலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை தடவினால் நரைமுடி பிரச்சனை தீரும்.
2. கீரை & வெந்தயம்
நரைமுடியை நிரந்தரமாக அகற்ற கீரை மற்றும் வெந்தயக் கீரைகள் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
3. முட்டை வெள்ளை கரு
முட்டையில் முடி கருமையாக்க தேவையான வைட்டமின்கள் உள்ளன.
2 முட்டையின் வெள்ளை கருவை எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி பின் அலசிக்கொள்ளலாம்.
4. மலை நெல்லிக்காய்
நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
மேலும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் வெள்ளை முடியை தடுக்கலாம்.
5. மெஹந்தி பேக்
மெஹந்தி பொடியை எடுத்து அதனுடன் 2 துளி யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து, அதனுடன் 2 சொட்டு கிராம்பு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
அதில் சிறிது தண்ணீர் சேர்த்து தலையில் தடவி பின் சாதாரண நீரில் கழுவவும்.
வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வருவது நரைமுடி பிரச்சனை நிரந்தரமாக நீக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |