நரைமுடியை இயற்கை முறையில் கருப்பாக்க உதவும் ஹேர் டை: எப்படி தயாரிப்பது?
பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை வீட்டிலேயே கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மருதாணி தூள்- 2 ஸ்பூன்
- காபி தூள்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் கொதிக்கும் வெந்நீரில் காபித் தூளைச் சேர்த்து கொதித்ததும் அதை முழுவதுமாக ஆற விடவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மருதாணி தூள் மற்றும் காபியை ஒன்றாக கலந்து தயிரில் சேர்க்கவும்.
இதை தலைமுடி முழுவதும் தடவி 1-2 மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்பு லேசான ஷாம்பு கொண்டு தண்ணீரில் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் தூள்- 1 ஸ்பூன்
- மேத்தி தூள்- 1 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய்- 5 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கடாயில், ஆலிவ் எண்ணெயை சேர்த்து 3 நிமிடங்கள் சூடாக்கி, இரண்டு பொடிகளையும் சேர்க்கவும்.
நன்கு கிளறி, முழுமையாக ஆற விட்டு இதனை வடிகட்டவும்.
இதை தலைமுடி முழுவதும் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் ஷாம்பு கொண்டு தண்ணீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |