முடி உதிர்வை தடுத்து முழங்கால் வரை வளர இந்த ஒரு Hairpack போதும்
இன்றைய நாட்களில் முடி உதிர்வு என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும்.
முடி உதிர்வைக் குறைக்கவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர்பேக் பயன்படுத்துங்கள்.
தலைமுடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும் ஹேர்பேக் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொய்யா இலை- 8
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- முட்டை- 1
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம், கழுவிய கொய்யா இலை அதனுடன் முட்டை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை ஒரு பருத்தி துணியில் சேர்த்து வடிகட்டி பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் தலைமுடிக்கு நன்கு எண்ணெய் தடவி பின் இந்த ஹேர்பேக்கை உச்சந்தலை முதல் நுனி முடி வரை நன்கு தடவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுத்து தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு என தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடிஉதிர்வை தடுத்து நீளமான கூந்தலுக்கு ஊக்குவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |