முடி வளர்ச்சியை இருமடங்கு அதிகரிக்க இந்த 2 பொருள் போதும் .., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், முடியின் வளர்ச்சியை இருமடங்கு அதிகரிக்கப்பது எப்படி என்று பார்க்கலாம்.
1. கற்றாழை
முதலில் ஒரு கற்றாழையின் ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு அதை அரை மணி நேரம் அப்படியே ஊற வைத்து பிறகு மென்மையான ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.
கற்றாழை மயிர்கால்களை வலுப்படுத்தி, முடி மெலிவதைக் குறைத்து, முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர்வதை உறுதி செய்கிறது.
2. வெந்தயம்
முதலில் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் இதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.
வெந்தயத்தில் உள்ள லிசித்தின் என்னும் பொருள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |