கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவரும் தங்களின் முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
இக்காலகட்டத்தில் ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- தண்ணீர்- 2 கப்
- சீகைக்காய் பொடி- 4 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
பின் இதில் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து நன்கு நிறம் மாறி வரும்வரை கொதிக்கவைக்கவும்.
அடுத்து இதனை நன்கு ஆறவைத்து ஒரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதில் சீகைக்காய் பொடி சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனை குளிக்கும்போது ஷாம்பூவிற்கு பதிலாக இதனை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
இந்த கலவையை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர முடி உதிர்வு நிரந்தரமாக நின்று முடி நன்கு வளர்ச்சியடையும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |