முழங்கால், முழங்கை கருமையை நீக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்
பொதுவாக அனைவருமே முகம், கை மற்றும் கால்களை வெள்ளையாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு வாயை சுற்றியும், முழங்கை, முழங்கால்கள் அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்.
அந்தவகையில் முழங்கை, முழங்கால்களில் உள்ள கருப்பு நிறத்தை போக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

1. எலுமிச்சை + தேன்- எலுமிச்சை சாறுடன் தேன் சேர்த்து முழங்காலில் தடவி 15–20 நிமிடம் விட்டு கழுவவும். தினமும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. பேக்கிங் சோடா- பேக்கிங் சோடாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மெதுவாக ஸ்க்ரப் செய்து கழுவவும். இதனை வாரத்திற்கு 2 முறை போதும்.
3. கற்றாழை ஜெல்- கற்றாழை ஜெல் தடவி 20 நிமிடம் வைத்து கழுவவும். இதனை தினமும் பயன்படுத்தலாம்.
4. உருளைக்கிழங்கு- இதன் சாறு எடுத்து முழங்காலில் தடவி 15 நிமிடம் வைத்து கழுவவும். தினமும் செய்தால் சரும கருமையை குறைக்க உதவும்.
5. தேங்காய் எண்ணெய் + சர்க்கரை- இதன் இரண்டையும் கலந்து முழங்காலில் தடவி ஸ்க்ரப் செய்து கழுவவும். அடிக்கடி செய்தால் சருமம் மென்மையாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |