கருப்பு உதடு சிவப்பாக மாறணுமா? மிருதுவான உதடு பெற எளிய டிப்ஸ்!
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உதட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
ஒரு சிலருக்கும் கறுப்பான உதடும் ஒரு சிலருக்கு சிவப்பான உதடும் இருக்கும். இதற்கான காரணம் தெரியாமல் பலரும் தவித்துக்கொண்டு இருகின்றனர்.
உதடு என்பது அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு அங்கமாகும். இதை அழகாகவும் ஆரோக்கியமாகவும் கட்டாயம் பராமரித்துக்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி உதட்டை அழகாக மாற்றலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
லிப் ஸ்கரப்
ஒரு டீஸ்பூன் சர்க்கரையை தேன் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து, உதட்டில் மென்மையாக தடவ வேண்டும்.
டூத்ப்ரஷ்
மென்மையான டூத்ப்ரஷை பயன்படுத்தி உதட்டில் உள்ள தோல்களை அகற்றலாம். வெதுவெதுப்பான நீரில் டூத்ப்ரஷை நனைத்து, அதை வைத்து வட்ட வடிவில் உங்கள் உதடுகளை கழுவினால் நல்லது.
தண்ணீர்
உதட்டை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். போதுமானளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பது நல்லது. உலர்ந்த மற்றும் வெடித்த உதடுகள் கருமை நிறத்தில் இருந்து மாறும்.
லிப் பாம்
ஷியா வெண்ணெய், கோகோ வெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவற்றில் செய்யப்படும் லிப் பாம் வாங்கி பயன்படுத்தவும்.
எச்சில்
எச்சில் வைத்து எப்போதும் உதட்டை நனைக்கக்கூடாது. எச்சிலில் உள்ள நொதிகள் மென்மையான தோல் உள்ள உதடுகளை கடுமையாக மாற்றும். ஆகவே லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.
ரோஸ் இதழ்
ரோஸ் இதழை பாலில் சில மணி நேரம் ஊற வைத்து, பேஸ்ட் போன்று மசித்து எடுத்துக்கொள்ளவும். பின் அதை உதட்டில் தடவி 15 நிமிடங்களுக்கு உலர வைக்கவும்.
பீட்ரூட் பாம்
பீட்ரூட் ஜூஸுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து, தினமும் உதட்டில் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் உடனே உதட்டில் உள்ள கருமை நீங்கும்.
மாதுளை விதை ஸ்கரப்
மாதுளை விதைகளை பொடியாக்கி அதை ஸ்க்ரப் போன்று பயன்படுத்த வேண்டும். இது உங்களின் உதட்டை இளஞ்சிவப்பாக மாற்றும்.
சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
சருமத்தை பாதுகாப்பது போன்று உதட்டையும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும். புற ஊதா கதிர்களிலிருந்து உதடுகளை காப்பதோடு கருமை நிறம் ஆகாமலும் தடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |