சருமத்தை பொலிவாக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
- தக்காளி சாறு- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை- ½
- பால்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மிட்டி, தக்காளி சாறு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின் இதில் தேன், எலுமிச்சை சாறு, பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

அடுத்து இதனை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே நன்கு உலரவைக்கவும்.
இதற்கடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை வாரம் இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தினால், முகம் பளிச்சென்றும், பிரகாசமாகவும் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |